design inspiration

'ஓவியர்'களாக உருவமெடுக்கும் ட்ரோன்கள், எப்படி..?

Source Muthuraj gizbot

வண்ண மையினால் நனைக்கப்பட்ட பஞ்சுகளை வைத்திருக்கும் ஒரு மினியேச்சர் கை கொண்ட சிறிய ட்ரோன்கள் விரைவில் பெரிய ஓவியங்கள் மற்றும் வெளிப்புற சுவரோவியங்கள் உருவாக்கும் வல்லமையை பெற இருக்கின்றன. இந்த கலை ஆக்கத்திற்கு புதிதாக விஞ்ஞானிகள் உருவாக்கிய மென்பொருளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.


ஸ்டிப்ப்ளிங் (stippling) என்று அழைக்கப்படும் இந்த கலைநுட்பத்தை கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தின் பால் க்றை மற்றும் அவரது மாணவர்கள் 'டாட் வரைபடங்கள்' மூலம் ஒரு சிறிய ட்ரோன் ப்ரோகிராமை உருவாக்கியுள்னர். நிரலாக்க திறமையுடன் ப்ரோகிராம் செய்யப்பட்டத்தை பின்பற்றி ட்ரோன்கள் துல்லியமாக, பறந்துக்கொண்டே திட்டமிட்டவழிகளில் வண்ண மைகளை செலுத்தி ஓவியங்களை உருவாக்கும்.


இதற்கான ட்ரோன்களின் மினியேச்சர் கையின் உள்ளங்கையில் மை நனைத்த பஞ்சு பொருத்தப்பட்டு ஓவியங்கள் மிக துல்லியமாக நிகழ்த்தப்படும். மேற்பரப்பில் வண்ணங்கள் பூசப்பட்ட பின்பு அதன் உள் உணரிகள் (internal sensors) மற்றும் ஒரு மோஷன் கேப்சர் அமைப்பு (motion capture system) உதவியுடன் சரியான இடங்களில் ட்ரோன்களால் மையை துடைக்கவும் முடியும்.


இதுவரை இந்த பறக்கும் ரோபோக்கள் மூலம் காண்பிக்கப்பட்ட தாள்களில் ஆலன் டூரிங், கிரேஸ் கெல்லி மற்றும் சே குவேராவின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. வரையப்பட்ட ஒவ்வொரு ஓவியமும் அதனதன் அளவுகளை பொருத்து சில நூறு புள்ளிகளில் இருந்து ஒரு சில ஆயிரம் கருப்பு புள்ளிகள் கொண்டு உருவாக்கப்படுகிறது

இதே முறையை பயன்படுத்தி இறுதியில், பெரிய ட்ரோன்கள் மூலம் அடைய கடினமான வளைந்த அல்லது ஒழுங்கற்ற கட்டிட முகப்பு மற்றும் வெளிப்புற பரப்புகளில் சுவரோவியங்கள் வரைய முடியும் என்று கூறியுள்ளார் மெக்கில் பல்கலைக்கழகத்தின் பால் கறை.





Test

About Unknown

0 comments:

Post a Comment

Powered by Blogger.